பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு

 
premalatha vijayakanth

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மீது, தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

premalatha

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

premalatha

தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக  அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.  பிரேமலதா தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் 300 பேருக்கு இலவச தையல் பயிற்சிக்கான டோக்கன்களை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.