முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி அரசு நிறுவனமான ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரவீந்திரன் என்பவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புகார் அளித்தார். ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜி மீது இரு வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.