சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.6.34 லட்சம் அபராதம் வசூல்!!

 
mask

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையிலும் வேகமெடுக்க தொடங்கிவிட்டது.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.  குறிப்பாக சென்னையில் 6 ஆயிரத்து 186 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சநிலை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

lockdown

சென்னையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 798 ஆக உள்ளது.  அத்துடன் 8,676 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதிகப்படியாக தேனாம்பேட்டையில் 3,372 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து அண்ணா நகர் , ராயபுரம் , கோடம்பாக்கம் , அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி குறைந்தது எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட்டது. இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது . பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

mask

இந்நிலையில் சென்னையில் நேற்று முகக் கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் ரூ.6 லட்சத்தை 34 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு விதிகளை மீறியதாக 1,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 1,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.