வேட்புமனுவில் வருமானத்தை மறைத்த சுந்தர்.சி- வழக்கு தள்ளுபடி
வேட்புமனுவில் வருமானங்கள் குறித்த தகவல்களை மறைத்த மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி -க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித்துறையை அணுக உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதி வாக்காளர் ஷகிலா தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில், புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் இயக்குனராகவும், பங்குதாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பெற்ற அவர், அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும், இதுசம்பந்தமாக விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மதிகாரி நீதிபதி அருள்முருகன் ஆகியோரிடம் அமர்வு முன்பு விசாரணைக் வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதிகள் இது குறித்து வருமான வரித்துறையை அணுக உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


