பார்த்திபனின் டீன்ஸ் படத்திற்கு தடை கோரி சிவபிரசாத் வழக்கு

 
ல்

நிலுவை தொகையான ரூ.51 லட்சத்தை கொடுக்கும் வரை டீன்ஸ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் படத்தின் புதிய அறிவிப்பு! New announcement of  Parthiban's Teenz!


நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த கிராபிக்ஸ் நிறுவன மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை உறுதி அளித்தபடி முடித்துத் தரவில்லை என்றும் கூடுதலாக தொகை கேட்பதாகவும் ரெகுலர் ஸ்டூடியோஸ் கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் மீது பார்த்திபன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் பந்தய சாலை போலீஸ் வழக்குப்பதிந்தனர்.  

இந்நிலையில் உழைப்பிற்கு தான் பணம் கேட்டோம், ஆனால் பார்த்திபன் தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர். பேசியதைவிட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே கிராபிக்ஸ் பணிகள் முடிக்க காலதாமதம் ஆனது என கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் விளக்கம் அளித்துள்ளார். மேலும் நிலுவை தொகையான ரூ.51 லட்சத்தை கொடுக்கும் வரை டீன்ஸ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கிராபிக்ஸ் நிறுவன வரைகலை கலைஞர் சிவபிரசாத் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் நடிகர் பார்த்திபன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீன்ஸ் திரைப்படம் வரும் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.