உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்திய வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த வழக்கு நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.