ஓபிஎஸ்க்கு எதிரான வழக்கு - தாமாக முன்வந்து விசாரணை

 
ops

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.

2001 முதல் 2006 ஆண்டுக்கு இடையே ஓபிஎஸ் ரூ.1.73 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடரப்பட்டது. 2012 ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறார். இதே நீதிபதிதான் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.