யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் - டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு

 
ttf

யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிடிஎப் வாசன் மீது கோவை காரமடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

\Image

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் . இந்த நிலையில் துணை ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் தெய்வமணி அடங்கிய தனிப்படை போலிஸார் ஆர் எஸ் புரம் பகுதிக்கு உட்பட்ட ரவுடிகளை கைது செய்ய திட்டமிட்டனர். அதனடிப்படையில் சமீபத்தில் ஆர் எஸ் புரம் பகுதியில் நடந்த கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்ட 30 நபர்களை போலிஸார் அடையாளம் கண்டனர் . அவர்களில் சிலர் ஆயுதங்களை பயன்படுத்துவதுபர்கள் என்று தனிப்படை போலிஸாருக்கு தெரியவந்தன. கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட நாளன்று இவர்கள் ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகின்றன. 


சட்ட ஒழுங்கை பாதுக்காக்கும் பொருட்டு, சமூக வலைதள ரீல் ரவுடிகள் , அடிதடி ரவுடிகள், கட்ட பஞ்சாயித்து ரவுடிகள் , ரவுடிகளுக்கு துணை போனவர்கள் என இதுவரை 60 நபர்கள் கைதாகியிருக்கின்றனர். இந்நிலையில் யூடியூபரும், மோட்டார் சைக்கிள் சாகசகாரருமான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டிடிஎப் வாசன், யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு யூடியூபில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காரமடை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.