சீமான் வீட்டின் அருகே உருட்டுக் கட்டைகளுடன் கூடியிருந்த தொண்டர்கள்- சீமான் மீது வழக்குப்பதிவு

நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் வீட்டின் அருகே உருட்டுக் கட்டைகளுடன் கூடியிருந்த தொண்டர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமான் வீடு முன்பு கடந்த 22ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த வந்த, பெரியாரிய உணர்வாளர்களை தாக்க சீமானின் வீட்டின் அருகே சட்ட விரோதமாக உருட்டுக்கட்டைகளுடன் நாம் தமிழர் கட்சியினர் பதுங்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, சீமான் மீது 189(4) - சட்ட விரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல், 126(2) - தடுத்தல், 351(2)- மிரட்டல், சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு(41) ஆகிய நான்கு பிரிவுகளில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.