ஆ.ராசா மீதும் வழக்குப்பதிவு

 
முதலமைச்சர் ப்ரோ! திருச்சியில் கத்தியது போல சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்ற என்ன தயக்கம்?- ஆ.ராசா

முதலமைச்சர் குறித்து கடந்த 12-ஆம் தேதி இழிவாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார். சேகர்பாபுவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் குறித்து கடந்த 12-ஆம் தேதி இழிவாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசிய புகாரில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.