திருவண்ணாமலையில் கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பலி..

 
accident


திருவண்ணாமலை அருகே கோளாப்பாடி லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கோளாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா,  காமாட்சி, சக்திவேல், சஞ்சய், செல்வம் ஆகிய 5 பேரும்  காரில் சென்றுள்ளனர்.  திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சக்திவேலுக்கு   சிகிச்சை முடித்துகொண்டு அவர்கள் கோளாப்பாடிக்கு சென்று கொண்டிருந்த போது, எதிரே  கோவையிலுருந்து  சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி வந்ததுள்ளது. அப்போது லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  

இறப்பு

இதில் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த சஞ்சய், செல்வம் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று இரவு  திருவண்ணாமலை அருகே  அரசு விரைவு பேருந்தும், இருசக்கர வாகனனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   மேலும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட வாசுகி மற்றும் சாந்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி  அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.