#BREAKING உயரும் கார்கள் விலை... இப்பவே உஷார் ஆகிடுங்க

 
s

புதிய கார்களின் விலை வரும் 1ஆம் தேதி முதல் 2 சதவீதம் உயரவுள்ளது.

Car Price Hike: Tata Motors, Maruti Suzuki And Kia India Announce Price Hike  From April; Check Details

மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இறக்குமதி செலவு அதிகரிப்பு காரணமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கார்களின் விலை 2% வரை உயர்த்தப்பட உள்ளது. சிறிய ரக கார்கள் முதல் நடுத்தர ரக கார்கள் வரை அனைத்து பிரிவுகளிலும் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. TATA மோட்டார்ஸ் முதல் Mercedes-Benz, BMW போன்ற சொகுசு கார் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 


இரும்பு, அலுமினியம் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இப்போது உள்ள சிறப்பு தள்ளுபடிகள் அடுத்த மாதம் முதல் குறைப்பு என்பதால் புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் இம்மாத இறுதிக்குள் வாங்குவதால் சுமார் 20,000 முதல் 50,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன.