விவசாய கிணற்றில் கவிழ்ந்த கார்- பெளர்ணமி கிரிவலம் சென்று திரும்பிய 4 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாயி கிணற்றில் கார் மூழ்கி நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் புதுச்சேரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் வினோத் அவரது நண்பர்கள் ராஜா,சேகர்,ஜெயின் ஆகிய நான்கு பேர் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சென்று சென்னை திரும்பியபோது ஆலம்பூண்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓர விவசாய கிணற்றில் விழுந்து மூழ்கியது. இதில் காரில் பயணம் செய்த நான்கு நபர்கள்ர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காரை கிரேன் உதவியுடன் மீட்டபோது மூன்று நபர்கள் பலத்த காயத்துடன் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடந்தனர். மேலும் காரில் 4 நபர்கள் பயணித்ததாக கூறப்பட்ட நிலையில் மூன்று பேர் ஏற்கனவே காரில் மீட்கப்பட்டுள்ள நிலையில், நான்காவதாக காரில் பயணம் செய்த நபரை தேடும் பணியானது சுமார் 5 மணி நேரமாக நீடித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடலை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

