சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு! பெரம்பலூரில் சோகம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இன்று காலை சமயபுரம் கேயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள தொழார்க்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு விரதமிருந்து மாலை அணிந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். இவர்கள் இன்று காலை 5 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சென்னை - திருச்சிதேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் ஒன்று பாதையை யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்Mது. இந்த விபத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொழார் க்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி. விஜயலட்சுமி, ,சசிகலா மற்றும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த சித்ரா ஆகிய 4 பெண்பக்தர்களும் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீஸார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறுஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிந்துவிசாரணை மேறகொண்டனர். மேலும் இந்தவிபத்தில் படுகாயமுற்ற தொழார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணை சிகிச்சைக்காக. பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபத்து ஏற்படுத்திய சென்னை, திரிசூலம் பகுதியை சேர்ந்த, சேர்ந்த கார் ஓட்ளர் கௌதம்(24) என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


