கார் விபத்தில் உருக்குலைந்த கார்- கால் சிக்கி துடித்த டிரைவர்! திண்டுக்கல்லில் பரபரப்பு
கொடைரோடு அருகே,நான்கு வழிச்சாலையில் ஆம்னி கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநரின் கால் சிக்கிய காருக்குள் சிக்கியதால், அவரை அரை மணி நேரம் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலை சடையாண்டிபுரம் பிரிவு என்ற இடத்தில்,மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக ஆம்னி காரின் முன் டயர் வெடித்து நான்கு வழிச்சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி ஆம்னி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் அதிஷ்டவசமாக படுகாயத்துடன் உயிர் தப்பினர். காரின் முன் பகுதி சேதம் அடைந்ததால், ஓட்டுனர் திண்டுக்கலை சேர்ந்த சீனிவாசன்(40) சீட்டில் அமர்ந்தபடி அவரது கால் சிக்கிக்கொண்டது.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் தனியார் கிரேன் ஊழியர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் பொதுமக்கள் கிரேன் உதவியுடன், கார் ஓட்டுனர் சீனிவாசனை சுமார் அரை மணி நேரம் போராடி, காரின் முன்பகுதியை உடைத்து அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலை சடையாண்டிபுரம் பிரிவு அருகில் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களையும் ஒரு வழி சாலையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



