உதகையில் அந்தரத்தில் பறந்து கார் விபத்து- பதைபதைக்க வைக்கும் காட்சி

 
உதகையில் அந்தரத்தில் பறந்து கார் விபத்து  உதகையில் அந்தரத்தில் பறந்து கார் விபத்து 

உதகையில் உள்ள பிரபல பெட்ரோல் பங்கில் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து சென்று முக்கிய சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஹில்பங்க் பகுதி வழக்கமாக பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் உள்ள தமிழகம் மாளிகை செல்லும் சாலையில் வந்த கார் ஒன்று  கட்டுப்பாட்டை இழந்த கண் இமைக்கும் நேரத்தில் பெட்ரோல் பங்கிற்குள் தாருமாறாக ஓடி  இரும்பு தடுப்புகளை இடித்து ரோகிணி நெடுஞ்சாலைக்கு பறந்து சென்று தலைக்குப்புற கவிழ்ந்ததுள்ளது. உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தலை கீழாக கவிழ்ந்த காரில் சிக்கி இருந்த உரிமையாளரை  மீட்டு பின்பு  காப்பாற்றினர். படுகாயமடைந்த கார் உரிமையாளர் சுரேஷ்  உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனால் சிறிது நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சினிமா பட பாணியில் பறந்து சென்று தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.