சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
அண்ணா நகரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் உட்பட 6 பேர் மீது கார் மோதிய விபத்தில் 2 பலியாகியுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்த நிலையில், பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை: அண்ணா நகரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் உட்பட 6 பேர் மீது கார் மோதிய விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ், நாகசுந்தரம் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.