ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் மோதிய கார்!
Aug 16, 2026, 10:51 IST1786857661975
கிண்டி ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சுற்றுச்சுவர் உடைந்தது.
சென்னையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுவர் இடிந்த நிலையில், காரில் இருந்த 5 பேரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காரை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

