பள்ளி வேன்- கார் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பலி

 
Accident

சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை சேர்ந்த குருசாமி (45). அவரது மனைவி வேலுத்தாய்(35), உடையம்மாள்(60). மனோஜ் குமார்(22) கற்பகவல்லி உள்ளிட்ட 5 பேர் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மேல ஒப்பனையாள்புத்தைச் சேர்ந்த  ஓட்டுநர் அய்யனார் காரை ஓட்டிச் சென்றார். 

அப்போது  சங்கரன்கோவில் தனியார் பள்ளி  வேன் பனவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பனவடலிசத்திரம் பெட்ரோல் பல்க் அருகே வந்தபோது பள்ளி வாகனத்திற்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பள்ளி வாகன ஓட்டுனர் திருப்பியபோது, எதிரில் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பள்ளி வேனில் இருந்த 4 மாணவர்கள் காயமடைந்தனர். தனியார் பள்ளி அனுமதி இன்றி சிறப்பு வகுப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் அறிந்து தென்காசி ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டார்.