தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- சென்னையில் பரபரப்பு
Jun 17, 2026, 21:40 IST1781712649000
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 20 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஆந்திர மாநில அதிகாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஜுன் 14 அன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை மூலம் விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர எல்லைக்குள் அண்டை மாநில மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்த நிலையில், சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 20 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஆந்திர மாநில அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்கத்தினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

