புதுச்சேரியில் மீன்பிடித்த நாகை படகு சிறைபிடிப்பு

 
fishermen

விதியைமீறி புதுச்சேரியில் மீன்பிடித்த நாகை படகை மீனவர்கள் பிடித்தனர். இதையடுத்து ஐந்து மாவட்ட மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். படகைத் திருப்பி தந்து இனி வந்தால் படகை தரமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

fishermen

நாகை மாவட்டத்திலிருந்து மீன்பிடி படகு கடலூரில் ருந்து மகாபலிபுரம் வரை தொழில் செய்யக்கூடாது என்ற உடன்படிக்கை உள்ளது. அதை மீறி நாகை படகு புதுச்சேரியில் மீன்பிடித்ததால் அதை பிடித்து புதுச்சேரியில் கட்டினர். இதையடுத்து புதுச்சேரியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்ட மீனவ பிரதநிதிகளின் கூட்டம் நடந்தது. இதில் நாகை மாவட்டத்தினரும் பங்கேற்றனர். அக்கூட்டத்தின் முடிவில் படகை திரும்ப ஒப்படைத்தனர். இனி இக்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டால் படகை திருப்பி தரமாட்டோம் என புதுச்சேரி மீனவர்கள் தெளிவுப்படத் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், “கடந்த 7ம் தேதி நாகை படகு மீன்பிடித்தபோது அதை பிடித்து கட்டினோம். அவர்கள் பெரிய அளவிலான படகைவைத்து சிறு மீனவர்கள் கூட வாழ இயலாத வகையில் மீன்களை பிடிக்கின்றனர். அதுவும் உடன்படிக்கைக்கு மாறாக செயல்பட்டனர். இதனால் சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஊர் பிரதிநிதிகளும் வந்தனர். இனி வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் பெரிய படகில் இரவில் செயின் கட்டி வலை போட்டு இழுக்கிறார்கள். இரட்டை மடிப்பு வலை என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் பயன்படுத்துவதாக தெரிகிறது. இனி வரமாட்டோம் என்று உறுதி தந்ததால் பிடித்திருந்த படகை திருப்பி தந்துள்ளோம். இனி தரமாட்டோம்” என்றனர்.