கேப்டன் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது – பாஜக விமர்சனம்..!

 
1

திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததை கேப்டன் ஆன்மா ஒருபோதும்  மன்னிக்காது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், தன் வாழ்நாள் முழுவதும் தீயசக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக என கூறப்பட்டுள்ளது.

மக்கள் விரோத திமுகவுடன் கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.