பொதுமக்களின் மீது தடியடி - தினகரன் கண்டனம்!!
நெல்லையில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பொய்வழக்குகளை பதிவு செய்யும் தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு.இசக்கிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பொய்வழக்குகள் பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது பொதுமக்கள் புகார் - அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 9, 2024
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப்…

பொதுமக்களின் புகார்களை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, எவ்வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதும், அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, தடியடி நடத்தியிருப்பதும் உட்சபட்ச அராஜகம்.
எனவே, பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது எழுந்துள்ள புகார்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்கள் மீது பதியப்பட்ட பொய்வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.