காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு விறுவிறு

 
zs zs

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு வெளிப்படைத்தன்மையாக நடைபெறும், குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீதான விருப்பமனுக்கள் ஆய்வு செய்யப்படும் என வேட்பாளர் ஆய்வுக்குழு (Screening Committee) தலைவரும், சத்திஸ்கர் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான டி.எஸ். சிங் தியோ தெரிவித்துள்ளார்.

Image

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆய்வுக்குழு (Screening Committee) தலைவரும், சத்திஸ்கர் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான டி.எஸ். சிங் தியோ மற்றும் உறுப்பினர்கள் யஷோமதி தாகூர், ஜி.சி.சந்திரசேகர், அனில்குமார் யாதவ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.எஸ். சிங் தியோ, “வார்ப்பெற்றுள்ள விருப்பமனுக்களை வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநிலம் மற்றும் தேசிய ஆய்வு  வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அதிக அளவில் விருப்ப மனுக்கள் வந்துள்ளது. வேட்பாளர் தேர்வு  வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.  வேட்பாளர் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் மட்டுமே எங்களது பணி. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். அதிக அளவிலான விருப்பமனுக்கள் வந்துள்ளதால் முடிந்த அளவில் நேர்காணல் வைத்து பட்டியலை பரிந்துரைப்போம்.  குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீதான விருப்பமனுக்கள் ஆய்வு செய்வோம். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெரும்” என தெரிவித்தார்.