சென்னையில் இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு

 
train

எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10, 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு மின்சார ரெயில்கள் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது.

train

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் ரெயிலும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரெயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை அதிகாலை 3.50, 4.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், இரவு 10.20, 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் பகுதி நேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.