Coldrif இருமல் மருந்தைத் தயாரித்த நிறுவனத்தின் உரிமம் ரத்து- ஆலை மூடல்

 
ச் ச்

22 குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படும் Coldrif இருமல் மருந்தைத் தயாரித்த Srisan Pharmaceuticals நிறுவனத்தின் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அந்த ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட "கோல்ட் ரிப்" என்ற இருமல் மருந்தை உட்கொண்டதாக 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கடந்த வாரம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இதே போல் 22 குழந்தைகளை பலி வாங்கிய நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய தமிழக உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபா ஜோசஃபின் திருவான்மியூர் வீடு, இணை இயக்குனர் கார்த்திகேயனின் அண்ணா நகர் வீடுகளிலும் இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இந்த மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளான நிர்வாக இயக்குனர் தீபா, மற்றும் இணை இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களது வீடுகளில் அமலாக்க துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ சன் பார்மா நிறுவனத்திடம் இருந்து ஏதேனும் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து இந்த சோதனையை அமலாக்க துறையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் Coldrif இருமல் மருந்தைத் தயாரித்த Srisan Pharmaceuticals நிறுவனத்தின் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அந்த ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு பிறப்பித்த்ள்ளது.