தெலங்கானாவில் 606 வேட்பு மனுக்கள் ரத்து- தேர்தல் ஆணையம் அதிரடி

 
election commision election commision

தெலங்கானாவில் 606 வேட்பு மனுக்களை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

election

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று  வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 606 விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யாதது, உரிய ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என 606 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.  

வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 2,898 வேட்பாளர்கள் சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் உள்ளனர். நாளை வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்பதால் நாளை மாலைக்கு பிறகு இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில்  அதிகபட்சமாக 114 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவரது மற்றொரு தொகுதியான காமாரெட்டியில் 58 பேர் போட்டியில் உள்ளனர். மேட்ச்சலில் 67 பேரும், எல்பி நகரில் 50 பேரும் போட்டியிடுகின்றனர். கோடங்கலில் 15 வேட்பாளர்களும் குறைந்தப்பட்சமாக நாராயணபேட்டையில் 7 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.