உங்களால மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் ஜெயிக்க முடியுமா..? ஆர்.பி.உதயகுமாருக்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி!

 
1

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்த தவெக-விற்கு சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த விஜயபாஸ்கர், தான் கட்சியில் இருந்து விலக்குவதாகவும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும் அறிவித்திருந்தார். மேலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின.  

இந்நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில்

"அடையாளம் கொடுத்து, அதிகாரம் கொடுத்து, முகவரி கொடுத்து, வாழ்வு கொடுத்து, தங்களை ஆளாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டிய இந்த சோதனையான நேரத்திலே கட்சி சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை தலைமை சரியில்லைன்னு அவதூறுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருந்தால் தொண்டர்கள் இனியும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தான் தலைமைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கட்சிக்கு விஜயபாஸ்கர் வருவதற்கு முன்பாக தனக்கும், தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துபத்துகளையும்  இப்போது விஜயபாஸ்கர் வைத்திருக்கிற சொத்து பத்துக்கள் முதலீடுகளை எல்லாம் அவர் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்கு போவாரா ? இது தொண்டர்களுடைய எதிர்பார்ப்பு. கட்சியில வாங்கின பதவி வேணடாம், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேண்டாம் என ராஜினாமா செய்து விட்டு  என்று போய்விட்டீர்கள் அதனால் நியாயப்படி  நீங்கள் கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்த நிலையில் தானே  வேற கட்சிக்கு போக வேண்டும். இந்த கட்சியில் எல்லாம் ஆண்டு அனுபவிப்பீங்க சொத்து பத்துகளை சேர்த்து முதலீடு செய்தீர்கள், செல்வாக்கை சேர்ப்பீர்கள், எல்லாம் சேர்த்த பிறகு தலைமையும் விமர்சிப்பீர்கள். தொண்டர்களை கைவிட்டு, மக்களை கைவிட்டு, உங்கள் சுயநலத்திற்காக உங்கள் முதலீடைக் காப்பாற்ற, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியை காட்டிக் கொடுத்தால் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் வயிறு எரிகிறது. எம்ஜிஆர் வளர்த்த கட்சி, அம்மா வளர்த்த கட்சி, இன்றைக்கு சாமானியர் எடப்பாடியார் கட்சியை நடத்தி வருகிறார் தலைமை சரி இல்லை என்று பதிவு போடுகிறீர்கள் எப்போ போடுவது?

சொந்த கட்சியில் ஜெயித்தால்தான் அமைச்சராக முடியும் வேறு கட்சியில் அமைச்சரானால்  மதிக்க மாட்டார்கள் த.வெ.க நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பாக சேர்ந்து இருக்க வேண்டாமா? ஏன் தேர்தல் பின்பு த.வெ.கவில் சேருகிறீர்கள் விஜயை வாழ வைக்கப் போகிறீர்களா? எத்தனை பதவி சுகம் கொடுத்த கட்சியை தோற்றவுடன் காட்டிவிட்டு செல்கிறீர்கள் அதிமுகவிற்கு இந்த கதி தான் விஜய்க்கு என்ன கதி? தலைமை சரியில்ல என கருத்து சொல்லி நாடகமாடி கட்சி தொண்டர்களுடைய நலனையும், கட்சியின் எதிர்காலத்தையும் காவு கொடுத்து விட்டு தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமே முக்கியம் என்று கட்சி தாவுகிற நடவடிக்கை இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எச்சரிக்கைக்காக இதை சொல்லுகிறேன்" - எனவும் தெரிவித்துள்ளார்.
 

இந்நிலையில் விஜயபாஸ்கரை விமர்சித்த ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். எங்களுடைய அழுத்தத்தின் காரணமாக தான் அவர் (விஜயபாஸ்கர்) MLA பதவியை ராஜினாமா செய்தார்.அதற்கு உதயகுமார் அவர்கள் பேசி இருப்பது மிகவும் தவறு.அவர் சொத்து கணக்கை காட்ட சொல்லுறாரு. 2016 முன்னாடி பொதுச்செயலாளர் சொத்து கணக்கு இருக்கும்-ல அந்த சொத்து கணக்கை பொதுச்செயலாளர் காமிக்கட்டும் அதுக்கு அப்புறம் எல்லோரும் காட்டட்டும்.நாங்களும் சொத்து கணக்கை காட்ட சொல்றோம். எங்களுக்கு அதுல பிரச்சனை எதுவும் இல்லை. உதயகுமார் அவைகளையும் சொத்து கணக்கை காட்ட சொல்லுங்க முதல்ல அவரை மதுரை மாவட்டத்துல ஒரு தொகுதியில் ஜெயிக்க சொல்லுங்க..அப்புறம் பார்க்கலாம் என பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது