இனி தங்கம் வாங்கலாமா..? வேணாமா..? விலை உயர்வால் மக்கள் குமுறல்..!!

 
Gold

பிரதமர் மோடி மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே தங்கம் வாங்கும்படி அறிவுறித்திய மறுநாளே தங்கம் விலை குறைந்தால் வரும் நாட்களில் படிப்படியாக குறையலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக தடாலடியாக உயர்ந்திருக்கிறது.

2 நாட்களில் ரூ.3,280 உயர்வு.!

நேற்று (செப்டம்பர் 3) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், ஒரு சவரன் ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனையானது.

இன்று (செப்டம்பர் 4) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.960 உயர்ந்து, ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது