நீங்க எல்லாம் திமுககாரங்களைப் பார்த்து கேள்வி கேட்கலாமா? சென்னை மேயர் பிரியா ஆவேசம்..!!

 
Q

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மிசா சட்டத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நீங்கள் எல்லாம் தி.மு.க.வை பார்த்து கேள்வி கேட்கலாமா? அந்த தகுதி உங்களுக்கு இருக்கிறதா? சட்டசபையில் வந்து என்ன பேச வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சொல்லித்தரவில்லை. இதில் பயிற்சி புரோகிராம் வேறு கொடுத்தீர்கள். யாரை சீண்டிப் பார்த்து இருக்கிறீர்கள். என்ன மாதிரியான ஒரு கழகத்தை சீண்டிப் பார்த்து இருக்கிறீர்கள் என்று தெரியாமல் சீண்டியுள்ளீர்கள். நாங்களாக பிரச்சினைக்கு போக மாட்டோம். ஆனால் வருகிற பிரச்சினையை என்னைக்குமே விட மாட்டோம். நீங்களே விட்டாலும் நாங்கள் அதை விட மாட்டோம்.

திரைப்படத்தில் 3 மணி நேரம் படம் நடிப்பது போல ஒரு மணி நேரம் சட்டசபையில் வந்து பேசிவிட்டு போகிறார் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டின் வரலாறு என்ன? அண்ணா, கருணாநிதி மற்றும் தலைவர் ஸ்டாலின் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபட்டு உள்ளார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்து இருக்கிறார்கள்.இன்று மிசா சட்டத்தை சட்டமன்றத்தில் பேசுகிறீர்கள். மிசா சட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும்.

முதுகை காட்டிக்கொண்டு ஓடு ஓடு ஓடு என்று ஓடிவிட்டு உதயநிதி ஸ்டாலினை போகக்கூடாது என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லிவிட்டு நீங்கள் ஓடுகிறீர்கள். மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விட மாட்டேன்" என்று சொல்லுவார்கள். அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும்... மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்” என்று பேசினார்.