"திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டும் முடியுமா?"- வானதி சீனிவாசன்
"திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டும் முடியுமா?"– வானதி சீனிவாசன் "திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டும் முடியுமா?"– வானதி சீனிவாசன் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “இன்றைய கூட்டத்தில் பொதுவான தமிழக அரசியல் சூழல், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்று பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் விரிவாக பாஜக தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாஜகவில் தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள்,தொகுதிகளின் எண்ணிக்கை என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்வது தான் இறுதியானது.
பாஜக குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்யும் தவெக தலைவர் விஜய் குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. ஆனால் விஜயின் நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்கிறார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் அவரால் மட்டும் முடியுமா? என்று அவர் யோசிக்க வேண்டும்? என்றார்.


