எங்களை போல் திமுக தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

 
1

கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் திமுகவால் தனித்து வெற்றிபெற முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார். 

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஜெயிக்க நாங்கள் தான் காரணம் என திமுகவினர் சொல்கின்றனர்; ஆனால் பல ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த நீங்கள், கூட்டணி இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட ஜெயித்து இருக்க முடியாது. தி.மு.க தனியாக நின்று 50 தொகுதிகளில் வெற்றி முடியுமா?" எனச் சாடியுள்ளார்.

மேலும், நாங்கள் தனி கட்சியாக நின்று ஆட்சிக்கு வந்துள்ளோம் என்றும், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகள் இல்லாத பட்சத்தில் தி.மு.க எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கக் காரணமே கூட்டணிதான் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.மேலும், மற்ற கட்சிகளின் வெற்றியை திமுகவினர் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.