ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்ல முடியுமா? முஸ்லிம் லீக் தலைவர் சர்ச்சை பேச்சு..!

கேரளாவில், மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஐ.யு.எம்.எல்., அங்கம் வகிக்கிறது.
இதன் பொதுச்செயலராக இருக்கும் சலாம், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆண்களும், பெண்களும் சமமானவர்கள் அல்ல. ஒலிம்பிக்கில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. ஆணும், பெண்ணும் வேறுபட்டவர்கள் என்பதால் தானே இது இருக்கிறது.ஆணும், பெண்ணும் எல்லா வகையிலும் சமம் என்று சொல்ல முடியுமா? உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதா? ஆண் - பெண் சமம் என்று சொல்பவர்கள், கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்பவர்கள்.
ஐ.யு.எம்.எல்., இரு பாலருக்கும் சமமான மற்றும் பாலின நீதிக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் பாலின சமத்துவத்தை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.