தி.மு.க விட 2 மடங்கு அளவு முதலீடு ஈர்க்க முடியுமா? -டி.ஆர்.பி ராஜா
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
அதாவது, கடந்த திமுக ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டை வெளியேறி விட்டதாக தவெக அரசு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது சம்பந்தமாகவே தற்போது டி.ஆர்.பி. ராஜா அறிக்கை ஒன்றினை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பச்சையாக பொய் சொல்கிறது தவெக அரசு. எல்லாவற்றிற்கும் ஆறு மாத காலம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்னவென்று முழுமையாக புரிந்து கொண்டதற்கு பின்பாக இதைப்பற்றி பேசலாம்.
திமுக ஆட்சி மீது பழி போடுவதாக நினைத்து தவெக அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பெரியளவில் தொழில்துறையை சார்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த உண்மையை உணரக்கூட திறனின்றி தங்களது திறமையின்மையை தற்போதைய ஆட்சியாளர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சி செய்கிறார்கள். இது தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் செயலாகும் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் டி.ஆர்.பி. ராஜா.
மேலும் முந்தைய திமுக ஆட்சியில் மூன்று கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டதாக அரசின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது. மேலும் பொருளாதாரம், தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்தான அடிப்படை புரிதலற்ற பச்சைப் பொய் எனவும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து, செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்துக்கு செல்லவில்லை. திட்டமிட்டு ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுள்ளது என்பதை முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலே பகிரங்கமான குற்றச்சாட்டாக பிரச்சார மேடையில் முன்வைத்தார்.
தொடர்ந்து டெல்லியுடன் போராடவும் செய்தார். இதனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், திமுகவை குற்றம்சாட்டுகின்றனர். இதன் மூலமாக தமிழ்நாட்டின் நலனை காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு தவெக சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார் டி.ஆர்.பி. ராஜா.
மேலும், இவர்கள் சொல்லும் எல்லா விதமான பொய்களுக்கும் என்னால் புள்ளி விவரங்களுடன் பதிலளிக்க முடியும். ஆனால் இவை எதையும் புரிந்து கொள்ளக்கூடிய திறனற்றது தவெக அரசு. முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார். அதோடு தன்னிடம் தொழில்துறையினர் பலரும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இந்த அரசின் அணுகுமுறை குறித்து விமர்சனங்களை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்த நிலையில், திமுக ஆட்சி காலத்தில் ரூ. 12.6 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்கு அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திராவிட மாடல் அரசு தொடர்ந்து இருந்தால் இம்முறை குறைந்தபட்சமாக ரூ. 25 லட்சம் கோடி முதலீடு வந்து இருக்கும். எங்களின் இந்த சாதனையை சிறுபிள்ளைத்தனமான அரசு முறியடித்து காட்டட்டும். இல்லை இதில் பாதியாவது செய்யட்டும் எனவும் டி.ஆர்.பி. ராஜா சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் !*
— Dr. T R B Rajaa (@TRBRajaa) June 23, 2026
த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக…

