பைசன் பார்க்கலாமா மை சன்? மழையால் மக்கள் தவிக்கும்போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?- தமிழிசை

 
தமிழிசை தமிழிசை

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவாமல், முதலமைச்சர் வெற்று வாக்குச்சாவடி கூட்டங்களை நடத்தி வருகிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “இன்று மழை வந்துகொண்டிருக்கிறது. மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 3000 பேரை வைத்துக்கொண்டு மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் திமுகவினர் பூத் கமிட்டிக் கூட்டம் நடத்துகிறார்கள். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவாமல், முதலமைச்சர் வெற்று வாக்குச்சாவடி கூட்டங்களை நடத்தி வருகிறார். திமுக மாடல் நிச்சயமாக வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். மாரி (மழை) வந்துகொண்டிருக்கும்போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு? மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த அரசு ஆணவத்தில் செயல்படுகின்றது, மழை வந்துகொண்டிருப்பதால் உதய சூரியன் காணாமல் போகும்.

ஆன்மீகத்தையும், தமிழ்நாட்டையும் பிரிக்க முடியாது. அதேபோல் இந்து தர்மத்தையும், தமிழகத்தையும் பிரிக்க நினைப்பவர்கள், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு அரசியல் கட்சி தலைவர் சுதந்திரமாக ஒரு இடத்திற்கு போய் மக்களை சந்திக்க முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறுவது இயற்கையான நிகழ்வுதான்” என்றார்.