கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா ? சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு..!

 
1

2019-ம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5,33,586 பேர் பலியாகினர்.  மொத்தம் மூன்று அலையாக பரவிய கொரோனா வைரஸால் இதுவரை தமிழ்நாட்டில் 36,11,852 பேர் பாதிக்கப்பட்டு,  38,086 பேர் உயிரிழந்தனர்.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த  கோவாக்சின்,  கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி,  நோவாக்ஸ்,  பைஃசர்  உள்ளிட்ட  தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில்  இந்தியாவில் கோவாக்சின்,  கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் போடப்பட்டது. 

இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பின்விளைவுகள் அல்லது அபாயகரமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ நிபுணர்கள் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.