100 நாள் வேலை திட்ட மோசடி- ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க முடியுமா? நீதிபதிகள் கேள்வி

 
madurai high court

100 நாள் வேலை திட்டத்தை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், இதுகுறித்து அரசு தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சமூகவிலகலுக்கு ஆதாரம் தேவை:  மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் | Centre seeks proof of social distancing  at MGNREGA sites - hindutamil.in


தென்காசி மாவட்டம் தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் பொறுப்பாளர் 90 நாட்களையும் கடந்து கடந்த 7 மாத காலமாக பணியில் தொடர்கிறார். மேலும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பனியாற்றும் வேலையாட்கள்  மூலம் தனி நபர் விவசாய நிலத்தில் வேலைகளை செய்கின்றனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும். நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர், நூறு நாள் வேலைத்திட்டத்தில்  இவ்வாறு முறைகேடுகள் நடைபெறுவதை எவ்வாறு கண்காணிக்க படுகிறது. நூறு நாள் வேலைத் திட்ட பணியை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க முடியுமா? என கேள்வி எழுப்பொனர். தொடர்ந்து இது  குறித்து அரசுத் தரப்பில்  உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.