விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

 
tt

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்  வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது.

விக்கிரவாண்டி

இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்புமனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இன்று (08.07.24) மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்கிறது. தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க, பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.