வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர் - பேருந்தின் அடியில் சென்ற பைக் : அதிர்ச்சி தரும் சம்பவம் !!

 
tn

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

accident
வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர் சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.  கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில் நிலைதடுமாறி விழுந்த போது பேருந்தின் அடியில்பைக்  சென்றது. 

 tn

இருப்பினும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பினார். தனியார் இணைய சேவை நிறுவனத்தின் கேபிள் வயர்கள் சாலையின் குறுக்கே தொங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  இந்த விபத்து தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தபட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.