#BREAKING விரைவில் அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று திரும்பியதும் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 4 முதல் 6 அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ள நிலையில், அவர்களுக்குப் பதிலாகப் புதிதாகப் பொறுப்பேற்க உள்ளவர்களின் உத்தேசப் பட்டியலும் தற்போது தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம், சிலரின் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு புதியவர்கள் அமைச்சரவையில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமைச்சர்களின் செயல்பாடு குறித்த தரவுகளை முதல்வர் சேகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ள அமைச்சர்கள் யார், புதிதாக யாரெல்லாம் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

