முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் ..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூடுவது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இதில் இடம் பெறம் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்ததால், பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.