CAA அமல் - தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு!

 
vijay

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, 2014க்கு முன்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

tn

கடந்த 2019 ஆம் தேதி இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


 

tn

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் , நடிகருமான விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.