சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும்!

 
college exam college exam

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் 3 முறை இறுதி தேர்வு நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. 

இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்களில் இனி மூன்று முறை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.