இடைத்தேர்தல் முடிவு - முதல் சுற்று முடிவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை..

 
evks elangovan


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தபால் வாக்குகளில்  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை  வகிக்கிறார்.


கடந்த 27ம் தேதி நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் மொத்தம்  74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணும் மையமான  சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று  நடைபெறுகிறது.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில்,   80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதியில் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன..  

இடைத்தேர்தல் முடிவு - முதல் சுற்று முடிவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை..

தபால் வாக்குகள் எண்ணிக்கையில், முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேசைகள் அமைக்கப்பட்டு மற்றும் 15 சுற்றுகளாக  எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று முடிவில்  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 590 வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல்  அதிமுக வேட்பாளர் தென்னரசு 171 தபால் வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தேமுதிக வேட்பாளர் 5 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2 வாக்குகளும் பெற்றுள்ளனர்.