விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எவ்வளவு வாக்கு அதிகம்?

 
நான் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்திருக்கிறேன்! நீங்கள் அனைவரும் என்னை 100% நம்பலாம்- விஜய்

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 3,000 மற்றும் திருச்சி கிழக்கில் 8,300 வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது.

ச்

தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 3,000 மற்றும் திருச்சி கிழக்கில் 8,300 வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது. பெரம்பூரில் 86.72 சதவீதம் வாக்குகளும், திருச்சி கிழக்கில் 81.67 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 6 மணி நிலவரப்படி, 85.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலை விட 80,500 வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதியில் 6 மணி நிலவரப்படி, 73.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் கடந்த தேர்தலை விட 7,171 வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன.