விரைவில் 5 தொகுதி இடைத்தேர்தல் - சுற்றறிக்கை வெளியீடு

 
அர்ச்சனா

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தலை நடத்த முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தலை நடத்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஜூன் 22ஆம் தேதிக்குள் செய்யுமாறு தேர்தல் ஆணையம அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.