இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு! அதிர்ச்சியூட்டும் 5 மணி நிலவரம்
5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86% தாராபுரத்தில் 78.53% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கிய நிலையில், 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.18 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. தாராபுரத்தில் 56.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 83.86 சதவீதம் வாக்குகளும், தாராபுரத்தில் 78.53 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

