தருமபுரியில் தவெகவினர் கைது - புஸ்ஸி ஆனந்த் கண்டனம்

 
ஆனந்த்

தருமபுரி மாவட்டம் கரஹள்ளி சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டனர்.

Image


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கரகஅள்ளி சுங்க சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை 
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வெற்றிக் கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றென்றும் களத்தில் நிற்கும்.


அராஜக போக்குடன் கைது செய்யப்பட்ட கழகத் தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.