செப்.9-ம் தேதி மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் - புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

 
vijay

தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay

நடிகர் விஜய்யின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு நிகராக தீவிரமாக இயங்கி வருகிறது. மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை,  அன்னதானம் , தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தல் , ஏழை எளிய மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த விஜய் பயிலகம் , இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் அவ்வப்போது மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

vijay

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார்.