``இனி ஈரோடு விஜயின் கோட்டை... போடுங்கள் உங்கள் ஓட்டை’’- புஸ்ஸி ஆனந்த்

 
ச் ச்

நாம் போடுவது ஓட்டு அல்ல, தமிழ்நாட்டு எதிர்காலத்தின் அஸ்திவாரம் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “இனி எப்போதும் ஈரோடு தளபதியின் கோட்டை தான். மாபெரும் வெற்றியின் தொடக்கத்திற்காகவே இந்த கூட்டம் கூடியுள்ளது. நாம் போடுவது ஓட்டு அல்ல, தமிழ்நாட்டு எதிர்காலத்தின் அஸ்திவாரம். உங்கள் குடும்ப ஓட்டை தளபதிக்கு போட தயார்படுத்திக் கொள்ளுங்கள். விஜய்யின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவோம். 234 தொகுதியிலும் விஜய் விரல் காட்டுகிறவர் வெற்றி பெறுவார்” என்றார்.